Thursday 14 November 2013

நமக்குப் பிடித்த பெண்ணுக்கு சமைக்கத் தெரிகிறதா என்று கூட இப்போதெல்லாம் ஆண்கள் பார்ப்பதில்லையாம். (அதான் முக்குக்கு முக்கு ஹோட்டல் கட்டி வச்சிருக்காங்களே.. அப்புறம் எதுக்கு சமைக்கனும்)
ஆண்களின் பார்வையில் நிறைய மாற்றங்கள் தெரிவதாக இந்த ஆய்வு சொல்கிறது.
பெண்கள் அழகாக இருக்கிறார்களா, பெர்பெக்ட்டான வளைவுகளுடன் இருக்கிறார்களா என்றெல்லாம் இப்போது ஆண்கள் பார்ப்பதில்லையாம்.
அதேபோல சமையல் தெரிகிறதா என்று கூட பார்ப்பதில்லையாம் ஆண்கள்.
நல்ல புத்திசாலிப் பெண்ணா, அறிவார்ந்த சிந்தனைகளுடன் கூடிய பெண்ணா, கேரக்டர் நல்லாருக்கா என்றுதான் பெரும்பாலான ஆண்கள் பார்க்கிறார்களாம்.
ஆனால் பெண்கள் இதற்கு நேர் மாறானவர்களாக இருக்கிறார்களாம். அதாவது பார்க்க ஸ்மார்ட்டாக, அழகாக இருக்கும் ஆண்கள்தான் பெண்களை முதலில் கவருகிறார்களாம். என்னதான் கேரக்டர் நன்றாக இருந்தாலும் கலர் கம்மியாக இருந்தால் லேசான நக்கல் பார்வை பார்க்கிறார்ளாம்.
அதேபோல தங்களுக்குக் கணவர்களாக வருகிறவர் நல்ல வசதியுடன் கூடியவராக இருக்க வேண்டும் என்பது இந்தக் காலத்துப் பெண்களின் பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறதாம்.
ஆண்கள் பெண்களின் குணாதிசயத்தைப் பார்க்கும் அதே நேரத்தில் இப்போதைய நவநாகரீக பெண்கள் பணத்தின் மதிப்பைப் பார்க்கிறார்களாம்.
30 நாடுகளில் 12,000 ஆண்,. பெண்களிடம் இதுதொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment